Monday, January 12, 2009

தமிழக உறவுகளுக்கு

ஒவ்வொரு தமிழக உடன் பிறப்புக்களுக்கும்...
ஈழத்தமிழனின் வேண்டுகோள் கடிதம்
எமக்காக உங்களில் பலரின் உணர்வுகள் அடிபட்டு நொந்து நூலாகி இருக்கும் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை அளிக்கலாம். நிச்சயமாக. ஆனால் இந்திய அரசியலை ஓரளவிற்கு விளங்கிக்கொண்ட எனக்கும் சிலருக்கும் அது மிகக் கசப்பான உண்மையான எதிர்வுகூறல்களை திறந்துள்ளது. இன்று எமக்காக குரல் கொடுக்கும் நீங்கள் தோல்வியுற்றால் நாளை நீங்கள் உங்களுக்காக எந்தொவொரு சூழ்நிலையிலும் குரல் கொடுத்தாலும் மிகக் கேவலமாக (தற்பொழுது எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கும் போது என்ன நிலை ஏற்பட்டதோ) உதாசீனப்படுத்தப்படலாம். இது யதார்த்தம். சிலவேளை என் வார்த்தை வடிவமைப்பு இந்து தினமலர் பத்திரிகை எழுதுவது போல இருக்கலாம். அதைவிடுத்து எமது போராட்டம் பற்றிய ஒரு சிறு வரலாற்று அறிமுகம்.

இந்த அறிமுகம் மிகமுக்கியமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக உங்களை திசைதிருப்பும் சக்திகளுக்கு ஒரு கேள்வியாகவும் உங்களுக்கு ஒரு விளக்கமாகவும் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

80களுக்கு முன் ஏன் போராட்டம் ஆரம்பித்தது. சுருக்கமாக சொல்லாப்போனால் தமிழர்கள் ஒதுக்கப்படடார்கள். இதைப்பற்றி விளக்கமாக எழுதமுடியாது.
57 கலவரம் பின் 83 கலவரம் இப்படிப் பல. ஒன்றைமட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

1. எமது போராட்ம் நியாயமானது. மற்றது அது இலகுவாக அரசியல் தீர்வை அடையமுடியாது. தமிழீழம் தான் தீர்வு.
2. அல்லது ஒன்றுபட்ட சிறிலஙகாவிற்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறையாண்மைக்குற்ட்ட தீர்மானம்.

இதில் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் ஒருவருக்கு மற்றது கேலிக்குரியதாக இருக்கலாம்.

இப்பொழுது இரண்டாது விடயத்திற்கு வருவோம். அதில் முக்கியமாக இந்திய மத்திய அரசும் (இதில் காங்கிரஸ் பா.ஜ.க. என்று ஒன்றும் இல்லை. அனைத்தும் 3 வீதமான பிராணர்களாலும் அவர்களை சார்ந்தவர்களாலும் தீர்மானிக்கப்படும் இந்திய வெளியுறவுக் கொள்கை.) கருணாநிதியும், ஞானியும் தெளிவாக பிண்ணுட்டங்களை இடும் பலருக்கும் தெரிந்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் இலங்கை இறையான்மைகுட்பட்ட ஒரு தீர்வு.
அது சரி 22000 போராளிகளையும்.. வேண்டாம் புலி பயங்கரவாதிகளையும் 1லட்சத்திற்குமேற்பட்ட மக்களையும் கொன்றாழித்த பின் ஒன்றுபட்ட இலங்கை உங்களுக்கு சரியாக படாலம். எமக்கல்ல. இவ்வளவு இழந்த பின் ஒன்றுபட்ட இலங்கை ஒரு கேலிக்கூத்தாகும். ஆனால் நிச்சயமாக மேலே குறிப்பிட்டவர்களுக்கு அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஆனால் ஏன் என்று சற்று சிந்தித்தீகளா? சில அடிப்படையன விடயங்களை மறைத்துவி்ட்டு (மறந்து விட்டல்ல மறைத்துவிட்டு) பேசும் இந்திய வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் (இந்து, தினமலர், ஞானி, தமிழக காங்கிரஸ்) சில பிண்ணுட்டம் இடுவோர்ருக்கும் நான் தெளிவுபடுத்ததேவையில்லை. காரணம் அவர்கள் தெரிந்தும் செய்பவர்கள். அவர்களின் கருத்தை நீங்கள் ஏன் ஒதுக்கவேண்டும் அவர்கள் எவ்வாறு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தங்களின் மிகக் கேவலமான கருத்தை உள்நுளைப்பார்கள் என்றே நான் இந்த பதிவை இடுகிறேன்.

இந்திய இராணும் இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளுக்கும் மற்றும் பல போராட்டக் குழுக்களுக்கும் இந்தியாவின் பல இடங்களிலும் ஏன் ஆயுத பயிற்சி அளித்து? அப்போது எங்கே போனது இலங்கைத்திருநாட்டின் இறையான்மை? எப்படி அமரிக்கா காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சியம் ஆதரவும் அளித்ததோ அதே போல் தான் இங்கும் இந்தியா பிரிவினையை ஆதரித்தது.இப்போது எங்கிருந்து வந்தது சிறிலங்கா பாசிச நாட்டின் இறையாண்மை. தமிழக மக்களே, கொள்கைகள் ஆளும் வர்க்கங்களின் விருப்பத்திற்கே வகுக்கப்படுகின்றன.

ஈழத்தமிழர்களை விடுங்கள். அரபிக்கடலில் இந்திய மாலுமிகளுக்கு ஆபத்து. உடனே இந்திய போர்க் கப்பல்கள் போய் கடற்கொள்ளையர்களை வேட்டையாடிவிட்டு வருகின்றன. தமிழக கடலில், இந்திய பெருங்கடலில்ல, தமிழக கடலுக்குள்ளே பல வருடங்களாக தமிழ் மீனவர்கள் வேட்டையாடடப்படுகின்றனரே நடுவன் அரசு என்ன புடுங்கிறது. காங்கிரஸ்காரர்களே சொல்லுங்கள்?

கருணாநிதி தன் பரிவாரங்களுடன் டெல்லிக்கு காவடி எடுத்தபின் 35நாட்களுக்குப் பிறகு மன்மோகன் கடவுள் சென்னை வந்து சொன்னாராம் பிரனாப் விரைவில் சிறிலங்கா செல்வார் என்று. இதையே மன்மோகன் சிங் வெளிநாட்டு இந்தியர் சந்திப்பில் வேண்டாம் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் சொன்னாலே அவர்களின் அக்கறை பற்றி விளங்கியிருக்கும். அரசியல்ல இதல்லர்ம சகஜமப்பா என்று நீங்கள் நினைக்கலாம். இப்படியே உங்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள். ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள் அவர்கள் ஈழத்தமிழர்களை மதிக்காவிட்டால் உங்களையும் மதிக்க வில்லை என்று.

நீங்கள் இந்தியர்களாக இருங்கள். ஆனால் தமிழனாக இருங்கள். கார்கிலில் போர் என்றால் நிதி. பிகாரில் வெள்ளம் என்றால் நிதி. தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தது ஆனால் எங்கிருந்தும் நிதி வரவில்லை. அவர்கள் வறுகும் மட்டும் வறுகுவார்கள். நீங்களும் வாரி வழங்கிங்கொண்டிருங்கள்.

No comments:

Post a Comment