கருணா தன் காதலியுடன் இருப்பதை அண்மையில் கொலைசெய்யப்பட்ட லசந்த கடந்த 31ஆம்திகதி ஒரு நட்சத்திர விடுதியில் பார்த்ததாக செய்தி ஒன்றை இலங்கையின் இனவாத பத்திரிகையின் உச்சமான ஜலன்ட் பத்திரிகை வெளியிட்டிருந்தது. என்னடா சாத்தான் வேதம் ஓதுகிறது என்று பார்த்தேன்.
இதைப்பற்றி பேசுவதற்கு முன் தமிழர் வரலாற்றிலேயே மிகச்சிறந்த ஒரு ஊடகவியலாளரும் பந்தி எழுத்தளருமாகிய தாரகி என அறியப்பட் சிவராமை பற்றி ஒரு சிறு அறிமுகம். பேராதனைப்பல்கலைக்கழத்தில் ஆங்கில இலக்கியம் படித்தவர். ஈழப்போராட்டத்தில் ஆரம்பகாலம் தொட்டே ஈடுபாட்டுடன் இயங்கிவந்தவர். புலிக்கு எதிரான இயக்கத்தில் இருந்தாலும் பி்ன் புலிகளின் விடுதலை தொடர்பான தெளிவில் புலிகாளால் உள்வாங்கப்பட்டவர். இங்கு முக்கயமாக கவனிக்கப்படவேண்டியது புலிகளை எடுத்தற்கெல்லாம் குற்றஞ்சாட்டும் எவரும் இவரோடு புலிகளின் உறவின் ஆரம்பத்தையும் பின் அதன் ஆழத்தையும் எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் தனக்கென ஒரு சிற்பபான பாணியைக் கொண்ட இவர் எப்போதும் மிக எளிமையான வாழ்க்கையை கொண்டிருந்தார். புலிகளின் போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து அவர்களோடு இணைந்து மிகவும் நம்பிக்கைக்கும் உரியவராக விளங்கினார். புலிகள் தங்கள் எதிரிகளையெல்லாம் கொல்வார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்ப்பிக்க இவருக்கும் புலிகளுக்கும் இடையே மலர்ந்த இவரது ஆழ்மையான உறவே போதும். தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த மிகச்சிறந்த பத்தி ஆக்கங்களுக்கு சொந்தக்காரரான இவரின் ஆக்கங்களைப்படித்தே நான் அரசியலில் கற்றுக்குட்டி நிலைக்கு வந்தேன். எதையும் மிக நுட்மான முறையில் ஆய்வு செய்து வெளியிடும் இவரின் ஆக்கங்கள் சிறிலங்கா அரசுக்கு மிகுந்த தலையிடியை கொடுத்தது உண்மை. இவரின் ஆங்கில ஆக்கங்கள் சிங்கள மக்களிடையே தாக்கங்களை ஏற்படுத்தியது. இன்நிலையில் ஒருநாள் இரவு கடத்தப்பட்டு சிறிலங்காவின் உயர் பாதுகாப்புவலயத்தில் பாராளுமன்றதிற்கு அருகில் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். அதற்கு காரணம் இன்னோரு அடிவருடி இயக்கமான டெலோவைச் சேர்ந்த சித்தார்த்தன் என கதைகள் வந்தன.
சரி விடயத்திற்கு வருபோம். இந்த லசந்தவிற்கு எதிராக அரச தரப்பில் இருந்து கொலைமிரட்டல்கள், தாக்குதல்கள் என பலதை சந்தித்தவர்। எனினும் எவ்வித பயமுமின்றி எதிர்கொண்டவர்। கோதபாய இவருக்கு எதிராக பல வழக்குகளையும் போட்டுள்ளார்। இப்படி உலகமே அரசாங்கத்தை சந்தேகப்படும் போது என்னடா இது கருணாவை இழுக்கிறார்களே। அதுவும் புலனாய்வு ஊடகவியல் (Investigating journalism) என்ற விடயமே இல்லாத ஜலட் பத்திரிகையிருந்து என்று பார்த்தால் எனக்கு நான் மேலே சொன்ன விடயம் ஞாபகத்திற்கு வந்தது. இரு கொலைகளுக்கும் அரசாங்கம் முக்கிய காரணமாக இருந்து கொண்டு வேறுஒருவர் மீது பழிபோடுவது போல ஒரு சந்தேகம்.
1. கருணாவை லசந்த சந்தித்திருந்தால் ஏன் அவர் அதற்கு பின் (டிசம்பர் 31) தமது எந்த பத்திரிகையிலும் அதைப்பற்றி எழுதவில்லை.
2. கருணா காதலியுடன் பெந்தோட்டையில் அவ்வளவு இலகுவாக பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வரமாட்டார். வந்திருந்தாலும் லசந்தவோ வேறு பத்திரிகையாளர்களோ அவர்ருக்கு அருகில் விட்டிருக்கமாட்டார்கள் சிறிலங்காவின் சிறப்பு மெப்பாதுகாப்காளர்கள். (அப்படி லசந்தவினால் கருணாவை இலகுவாக பார்க்கமுடியுமானால் கரும்புலிகள் அவருக்கு முதல் கருணாவை சந்திதிருப்பார்கள்.)
3. இனவாத ஊதுகுழலான ஜலட் பத்திரிகைக்கு எப்படித்தெரிந்தது இந்த கதை.
இப்படிப் பல சந்தேகங்கள். உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா? மிகப்புத்திசாலியான எதிரி. ஆனால் குள்ளநரித்தனத்தில் மட்டும். பொறுத்திருந்து பார்ப்போம் வீரத்தில் யார் என்று.
Monday, January 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment