தமிழக உறவுகளுக்கு,
ஈழத்திலிருந்து.
நன்றி: இணையத்தளம்
மற்றும் படி என்ன சொல்வது. சிலர் உணர்ச்சிவசப்படாமல் பின்னுட்டமிடுபவர்கள் எப்படி இடுவர்ர்கள் என நினைத்தேன்
சிறுமி என்று ஒத்துக்கொள்பவர்கள்: புலிகளின் சிறுவயது போராளி
பெண் என்று ஒத்துக்கொள்பவர்கள்: பெண் புலி உறுப்பினர்
தமிழர் என்பவர்: புலி தான் கொன்றது
மற்றும் படி உணர்ச்சிவசப்படுபவர்கள் எல்லாரும் தமிழர்கள் அல்லது மனிதர்கள்.
இதையல்லாம் காங்கிரஸ் பார்க்க வேண்டும் என நான் கேட்டமாட்டேன். ஏதோ இதைப்பார்த்துதான் அவர்களுக்கு அங்கு நடக்கும் அநியாயம் தெரியவேண்டியதில்லை. அவர்கள் கொடுத்த பணத்தில் தான் அவர்கள் அறியத்தான் இது நடக்கிறது. ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஏன் என்று புரியவி்ல்லை. மனித சங்கிலி நடத்தினால் தான் மன்மோகனுக்கும் சோனியாவிற்கும் ஈழத்தமிழர் அவலம் தெரியுமா? அப்படியானால் இந்திய அரசாங்கத்திற்கு இதல்லாம் தெரியாமல் தான் இருக்கிறதா? ம்ம். சிலவேளை மன்மோகன் குடுத்த 2000கோடியும் இவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஏன் பாரதிரரஜா, சீமான் அமீர் வைகோ இவர்கள் எல்லாம் புலிகளிடம் பணம் வாங்குவது என்று காங்கிரஸ்சரி பிராமண பத்திரிகைகள் இவற்றுடன் சிறிலங்கா அரசாங்கம் கூட சொல்கிறது. இது கூட இந்திய உளவுத்துறைக்கு தெரியாமல் தான் நடக்கிறது போல. காரணம் அப்படி வாங்கியிருந்தால் இவர்களையெல்லாம் ஒரு வாங்கு வாங்கியிருக்கலாம் தானே. மத்திய அரசாங்கம் என்னதான் செய்கிறதோ தெரியவில்லை.
Monday, January 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment