Tuesday, December 29, 2009

பிரபா தங்களின் கிரோ என்று பதிவிட்ட ஐயருக்கு சில கேள்விகள்...

அண்ணன் திண்ணையில் இல்லை என்றால்…. இவ்வளவு காலமும் எங்கிருந்தீர்கள்? புலிகளுக்கு பயம் என்று புருடா விடாதிர்கள்.. நீங்கள் குறிப்பிடும் யாரும் உயிருடன் இல்்லை என நினைக்கிறேன்… `ஹிரோ என்று தொடங்கினால் தான் வாசிப்பர்வகள் அதிகம் வருகார்கள் என்று தமிழரங்கம் முறையில் தொடங்கி கடைசியல் சகோதரயுத்தத்திற்கு பிரபாகரன் தான் காரணம் என்ற உங்களின் ஏவல் பூதங்களின் குரலையும் ஒலித்துவிட்டிர்கள். எதிரொலியாக நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள் என்று வேறு பக்கபாட்டு.. நடக்கட்டும்..
அது சரி புலிகளை விட 1000 மடங்கு கொலைசெய்த இந்தியாவைாய இலங்கையோ உங்களில் ஏன் குற்றம் சாட்ட முடியாது? எஜமானர்கள் மீது மரியாதையா? எனினும் சொல்லாமல் ஒன்றை சொல்லிவிட்டிர்கள். இன்னும் புலிகள் தலைவர் பெயரை புலிகளை வதை்து தலையங்கம் எழுதினால் தான் உங்கள் இணையத்தளமும் உங்களைப்போன்ற பலரது இனணயங்களும் வருகைகளை பெற்றுக்கொள்கின்றன.. 2 பக்க வருமானம் இன்னும் புலிகளால் தான். நக்கிறதுக்கும் காசு. வாலாட்டுறதுக்கும் காசு. குலைத்துவிட்டு அதற்கும் காசு….
அது சரி போராட்ட்ம் என்று வெளிகிட்டு இன்று என்னவோ செய்து கொண்டிருக்கம் காண்டிபனை உங்களால் ஏன் குறை சொல்ல முடியாது உள்ளது.. புலிகள் சகோதர யுத்தம் செய்தார்கள் என்று கத்தும் உங்களால் ஏன் புலி தலைவரை அழிக்க பல்லாயிரக்கனக்கான உங்கள் சகோதரர்களை கொன்றதை குற்றம் கூறமுடியாது உள்ளது? இதுவும் பல மடங்கு சகோதர கொலைகளுக்க சமமானதே…
இந்த மக்களின் குருதியில் வாழும் உங்களைப்போன்றவர்களுக்கு இதல்லாம் சாதாரணம் தான்.. ஆனை இருந்தாலும் காசு. இறந்தாலும் காசு… பிழைத்துக்கொள்ளுங்கள்….

மற்றொன்று… உங்கள் பதிவில் நீங்கள் எங்கு உங்கள் தலையங்கத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று கோடிடட்டு காட்டுங்கள்.. மற்றும் படி எழுதிவிட்டு படிபவர்களுக்காக தலைப்பை போடும் கீழ்த்தரமான பத்திரிகை தர்மம் தான் உங்களது தொழில்..

பிராமணீயத்தை வெறுத்த நீங்க்ள ஏன் ஐயா ஐயர் என்ற அந்த சமூகத்தின் அடையாளத்தை மட்டும் மாற்றவில்லை???

Wednesday, December 16, 2009

ஒரு பக்கத்தி்ல் ஒரு பாரதம் - அண்மையில் இரசித்த ஆசிரியப்பத்தி

ஒருவார காலதாமதத்தில் இருக்கிறமை அச்சிட வேண்டிய தேவை இப்போது இல்லை. அத்தகைய தேவைகள் கடந்த காலங்களில் இருந்தன. இப்போது அது இல்லையென்றே தெரிகிறது. நவம்பர் மாதக் கடைசி வாரத்தில் மீண்டும் ஒரு தலையங்கம் எழுதப்படுகிறது. இது எழுதப்படுகிறபோது 27ம் திகதி முடியவில்லை. உங்கள் கைகளில் 'இருக்கிறம்' அச்சாகி வருகிறபோது டிசம்பர் தொடங்கிவிடும். கடலலை போல எதையும் பொருட்படுத்தாது காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சில முடிவுகள் அல்லது தொடக்கங்கள் மிகக் குறுகிய கால இடைவெளியில்கூட நடந்து விடுகிறது. என்னதான் சொன்னாலும் நவம்பரின் இறுதி வாரத்தில் எதையேனும் செய்துவிடும் போக்கு எல்லோரிடமும் தெரிவதை உள்ளூர உணர முடிகிறது.

எங்கட மொழியில் சொன்னா அண்ணன் இப்ப திண்ணையில இல்லை. சும்மா கிடக்கிற அந்தத் திண்ணையில் இப்ப எல்லோரும் கூடிப்பேசுகினம். கூட்டங்கள் போடுகினம். அயலில மாநாடு வச்சு ஒரு பகுதி தன்ர உலகத் தலைமையை உறுதி செய்ய முயலுது. இன்னொரு பக்கத்தில் எல்லாத் தலையளையும் ஒண்டாக்கி யாரோ மிளகாய் அரைக்கினம். என்னத்தைச் சொன்னாலும் உரியவன் இல்லையெண்டால் எல்லாம் ஒரு முழம் கட்டைதான்.

எங்கட பக்கத்தில் இப்ப எல்லோரும் பசியோட இருக்கிறம். யார் குத்தினாலும் அவசரமா எங்களுக்கு அரிசி வேணும். உரல் கொண்டந்தவன் யார்? உலக்கை கொடுத்தவன் யார்? எவன் வீட்டில் நெல்லுக் குத்தப்படுகுது, என்பதான விசயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. காது, கண்ணெல்லாம் பஞ்சாகி அரிசிக்காக நாங்கள் கைகள் நீட்டுகிற காலத்தில இதையெல்லாம் யோசிக்க முடியாது. யாரும் வடை தந்தா சாப்பிட நாங்கள் தயார். உழுந்தாட்டினவன் யார்? ஓட்டை போட்டவன் யார்? எண்டெல்லாம் இனி யோசிக்க முடியாது.

எழுத்தோட எழுத்தா நவம்பர் கடைசியில இன்னொன்றையும் சொல்ல வேணும்.
கோவணத்தையாவது காப்பாத்த நாங்கள் நினைக்கிறபோது, அயல் வீட்டில பட்டு வேட்டி கட்டிக்கொண்டு சால்வை சாத்த வரச்சொல்லி ஒரு மூத்தவா கூப்பிடுகிறார். அவர் கட்டி இருக்கிறது பட்டு வேட்டி இல்லை என்று தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆனாலும் அவருக்கு சால்வை போர்த்த தயாராகிறவர்கள் பற்றி மனவேதனை இருக்கிறது.

செம்மொழி மாநாடு என்ன பாரதப் போரின் பத்தாம் நாளா?