Tuesday, January 13, 2009

தமிழரை ஏறி மிதித்த சிங்கள அதிகாரி- நன்றி: தமிழ்க்கதிர்


பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு உழைத்தவர்களில் ஆனந்தா கல்லூரி அதிபர் எல்.ஏச். மெதானந்தா, பேராசிரியர் எப். ஆர். ஜெயசூரியா, ஹென்பிற்றகெதரகே ஞானசீக தேரோ, அரச நிர்வாக அதிகாரி என்.கியூ. டயஸ், கே.எம்.ராஜரத்தின ஆகியோர் முதன்மை முக்கியமானவர்கள். 1956இல் பண்டாரநாயக்க பிரதமர் பதவியைப் பிடிப்பதற்கு இவர்கள் செய்த நாடளாவிய பிரச்சாரப் பணி அளப்பரி யது.

இந்த ஐவரில் என்.கியூ.டயஸ் எனப்படும் நீல் குயின்ரஸ் டயஸ் (Neil Quintus Dias) மிகவும் வித்தியாசமானவர். இவர் அதிதீவிர சிங்கள இனத் தேசியவாதி ஆனால் இவருக்குச் சிங்களம் சரிவரப் பேச வராது. அவருக்குக் கைவந்த மொழி ஆங்கிலம். அவர் பொதுமக்களோடு உறவாடுவதை விரும்புவ தில்லை. தனது தராதரத்திற்கு நிகரானவர் களோடு மாத்திரம் அவர் அளவோடு உறவாடு வார். உணவில் அவர் ஆங்கில முறையைக் கைக்கொண்டவர். ஆங்கிலேயர்களைப் போல் மதிய உணவுக்கு முன் சோடாவுடன் கலந்த ஜின் மதுவை உட்கொள்வார். கொழும்பின் பிரபல நட்சத்திர உணவு விடுதியில் கடலைப் பார்த்தாற் போல் அவருக்கென்று பிரத்தியேக மாக உணவு மேசையும் நாற்காலியும் போடப்பட்டிருக்கும். அவர் நல்ல பணவசதி உள்ளவர்.

இத்தனை அம்சங்களோடு கூடிய இந்த மனிதர் தமிழர்களை மனமார வெறுத்தார். தமிழர்களுக்குச் சிங்கள மேலாதிக்கத்தைப் புகட்ட வேண்டும். (Sinhala Ascendancy) என்று வெளிப்படையாக அவர் கூறுவார். அவர் யாழ்ப் பாணத் தமிழர்கள், ஒட்டுமொத்த இந்தியர்கள், றோமன் கத்தோலிக்க மதத்தினர், மேற்கு நாகரி கத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் போன்ற வர்களை அறவே வெறுத்தார். இவர்கள் மானு டப் பிறவிகள் அல்ல என்றும் அவர் ஆங்கில மொழியில் கூறுவார். இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளில் ஆரிய- சிங்கள ஆடை களை முதன்முதலாக அணிந்தவர் இவர்தான். ஆரிய சிங்கள ஆடை என்று வெள்ளை வேட்டி, கரை வைத்த சால்வை, நீளமான மேல்சட்டை என்பனவற்றை அழைப்பார்கள். தன்னுடைய போத்துக்கேயப் பெயரை மாத்திரம் மாற்ற அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் தனது பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் தனது பெயரை தயசிறி என்று பதிவு செய்துள்ளார்.

பேராசிரியர் கே.எம். பணிக்கர் என்ற மலையாளி 1944- 45 இல் இந்து மாகடலில் இந்தியா ஆதிக்கம் செய்ய வேண்டிய அவசியத்தையும், இலங்கை பர்மா உட்படக் கடலோர நாடுகள் இந்திய ஆளுமைக்குள் இருக்க வேண்டிய தேவையையும் உணர்த்தி ஒரு பாரிய நூலை வெளியிட்டார். (The Strategic Problems Of The Indian Ocean. By K.m.Panikkar 1944-45) இந்த நூலைப் படித்தபின் என்.கியூ. டயஸ் பல முக்கிய முடிவுகளை எடுத்தார். இந்தியா வின் பரந்த நோக்கங்கள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். இந்தியாவின் பிடியில் விழாமல் இலங்கை தன்னைக் காப்பாற்ற வேண்டும். இதற்கான வழிமுறைகளை இலங்கை கால தாமதமின்றி உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஈழத்தமிழர் தொடர்பாக அவர் பிற்காலத்தில் எடுத்த ஒவ்வொரு அசைவிலும் தெளிவாகத் தெரிகிறது. என். கியூ.டயசின் சில சிந்தனை ஓட்டங்களும் அவற்றிற்கு அமைவான செயற்பாடுகளும் அவரை ஒரு தீர்க்கதரிசி (Prophet) நிலைக்கு உயர்த்துவதாக அவரு டைய வாழ்க்கையை அலசியவர்கள் கூறுகி றார்கள்.

பிரிட்டிசார் காலத்தில் உருவாக்கப்பட்ட சி.சி.எஸ் (C .C .S = Ceylon Civil Service) என்ற நிர்வாக சேவை அதிகாரியாக டயஸ் தனது பொது வாழ்வை ஆரம்பித்தார். இன்று போல் அல்லாமல் சி.சி.எஸ் தர அதிகாரியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு உயர் கல்வித் தகைமை, குடும்பத்தொடர்பு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, உடல் அழகு, முகத் தழகு என்பன ஒருவருக்கு இருத்தல் அவசியம். இவருடைய நெஞ்சில் சிங்கள பௌத்த அடிப்படைவாதம் குடிகொண்டிருந்தது. பண்டாரநாயக்க 1956 இல் தனிச் சிங்களக் கோசத்தைக் கிளப்பியவுடன் பள்ளத்தை நோக்கி ஓடும் வெள்ளம் போல் டயஸ் பண்டாவுடன் ஒட்டிக்கொண்டார். தேர்தல் பிரச் சாரத்திலும் பின்னணி வேலைகளிலும் டயஸ் செய்த உதவிக்குப் பிரதியுபகாரமாக நிர்வாக சேவையில் அதியுயர் பதவியான திறைசேரிச் செயலாளர் பதவியைத் தர பண்டா முன்வந்தார். தனக்குக் கலாச்சார அமைச்சின் இயக்குநர் (Director Of Cul Tural Affairs) பதவியைத் தரும்படி டயஸ் வேண்டினார். டயஸ் பௌத்த- சிங்கள முன்னெடுப்பை இந்த அமைச்சு ஊடாகச் செய்யும் திட்டத்திற்கு அமைவாக இந்தப் பதவியைக் கேட்டுப் பெற்றார்.

1959 இல் பண்டாரநாயக்க ஒரு புத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டபின் 1959 தொடக்கம் யூலை 1960 வரை டபிள்யூ தக நாயக்கவும் டட்லி சேனநாயக்கவும் பிரதமர்களாக வந்தார்கள். இருவரும் ஒருவர்பின் ஒருவராகப் பதவி இழந்தபின் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியைப் பிடித்தார். இவருடைய ஆட்சி 1960 தொடக்கம் 1965 வரை நீடித்தது. இந்தக் காலத்தில் என்.கியூ.டயசின் ஆதிக்கம் உச்சம் அடைந்தது. கணவர் பண்டாரநாயக்கவுடனான டயசின் உறவு வித்தியாசமானது. சிறிமாவோ மீது ஆதிக்கம் செலுத்துவதுடன் டயஸ் தமிழர்களுக்கு எதிரான தனது சொந்தக் கொள்கையை வெகு தூரம் எடுத்துச் சென்றார். சிறிமாவோ ஆட்சி தனது சொந்த விருப்பு வெறுப்பை முன்னெடுப்பதற்கு டயசுக்கு வசதியளித்தது எனலாம்.

தனிச்சிங்களச் சட்டத்தை வட கிழக்கின் நிர்வாகம் அனைத்திலும் புகுத்த வேண்டும் என்பதில் கணவரிலும் பார்க்கச் சிறிமாவோ தீவிரம் காட்டினார். இந்த மட்டில் அவருக்கும் டயசுக்கும் ஒருமித்த கருத்துநிலை காணப் பட்டது. சிங்கள மேலாதிக்கத்தைக் காட்டு வதற்குச் சிங்கள மொழிதான் சிறந்த கருவி என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். தமிழர்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கைகளைப் பொறுத்தளவில் சிறிமா வோவின் நிலைப்பாடு ஷஷநீங்கள் கேட்பதைத் தரமாட்டேன், நான் தருவதைத்தான் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்|| டயசும் குறைந்த வரல்ல தமிழர்களின் கோரிக்கைகளைத் தீவிரமாக எதிர்க்கும்படி அவர் தனது அதிகாரிகளுக்குப் பணித்தார்.

சிறிமாவோ தனது ஆட்சியில் என்.கியூ. டயசை நிரந்தரப் பாதுகாப்புச் செயலராகவும் வெளிவிவகாரத்திற்குப் பொறுப்பானவராகவும் நியமித்தா (Permanent Defence Secretary Of Defence And External Affairs) சிறிமாவோ வின் அமைச்சர்கள் கூட டயசுடன் மோதுவதற்கு அச்சப்படும் அளவுக்குக் கொழும்பு விவகா ரங்களில் அவருடைய சகல வல்லமையுடைய ஆதிக்கம் செறிவாகப் பரவியிருந்தது. சிறிமாவோவின் முரட்டுப் பிடிவாதம் காரணமாக சம~;டிக் கட்சியினரின் வடகிழக்குத் தழுவிய சத்தியாகிரகப் போராட்டம் வலுப்படத் தொடங்கியது. சம~;டியினரின் எதிர்ப்பைச் சமாளித்தவாறு தனிச் சிங்களச் சட்டத்தைத் தமிழர் பகுதிகளில் புகுத்தும் பொறுப்பை டயஸ் ஏற்றுக்கொண்டார்.

1961 ஆம் ஆண்டு புதுவருடப் பிறப்போடு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியது. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருக் கோணமலை, மட்டக்களப்பு ஆகிய கச்சேரி அலுவலகங்களில் வேலை நடப்பதைத் தடுப்பதற்காகச் சத்தியாக்கிரகிகள் காந்திய முறைப்படி அலுவலக வாயில்களை முற்றுகை இட்டனர். பொலிஸ் படையின் தடியடி உட்படப் பல்வேறு வதைகளையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். 1961 மார்ச் மாதத்தில் தனது பரிவாரங்களோடு டயஸ் யாழ்ப்பாணம் வந்தார். அவரைச் சுற்றிப் பொலிசும் தமிழ் சிங்கள அதி காரிகளும் நிலையெடுத்து நின்றனர். யாழ். கச்சேரி வாயிலில் ஆண், பெண் சத்தியாக் கிரகிகள் அமைதியாக நிலத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையில் பாதை அமைத்துக் கச்சேரிக்குள் நுழைய டயஸ் எத்தனித்தார். இதைத் தடுப்பதற்காக சத்தியாக் கிரகிகள் நிலத்தில் நெடுஞ்சாணாகப் படுத்துக் கொண்டனர். அப்போதுதான் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புப் படித்த சிங்கள பௌத்த தீவிரவாதியான டயஸ் ஒரு மிலேச்சத்தனமான வேலையைச் செய்தார்.

படுத்திருந்த சத்தியாக்கிரகிகளை ஏறி மிதித்தவாறு அவர் கச்சேரிக்குள் நுழைந்தார். பொலிஸ்காரர்களையும் கூட வந்த அதி காரிகளையும் பார்த்து டயஸ் ஏன் தயங்கு கிறீர்கள், ஏறி மிதித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறினார். இந்தச் சம்பவம் சமஷ்டிக் கட்சியில் அப்போது உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற வீ.நவரத்தினத்தின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (The Fall And Rise Of The Tamil Nation. V.Navaratnam. (Anada) தனது இறுதிக் காலத்தில் நவரத்தினம் தமிழீழத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தார். சிங்களவர்கள் மத்தியில் டயசைப் போன்றவர்கள் பெரும்பான்மையாக இருக்கி றார்கள். அமைதி வழிப் போராட்டம் தோல்வி கண்டதற்கு இதுதான் காரணம். அமைதி வழியில் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கை களை வன்முறை மூலம் சிங்கள அரசுகள் அடக்க முற்பட்டபோது ஆயுதம் தூக்க வேண் டிய கட்டாயம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டது.வடகிழக்கு நிர்வாகத்தில் தமிழுக்கு இடமளிக்காமல் சிங்களத்தைப் புகுத்துவதில் சிறிமாவோவும் அவருடைய பாதுகாப்புச் செயலர் டயசும் விடாப்பிடியாக இருந்தனர். சிங்களத்தை நிர்வாக மொழியாகப் புகுத்தும் நோக்குடன் டயசின் ஆலோசனையுடன் யாழ்ப் பாண அரச அதிபராக நெவில் ஜெயவீர, மன்னார் அரச அதிபராக எல்.ஓ.கே.ஜீபர்நாந்தோ, வவுனியா அரச அதிபராக ஆர்.எம்.பீ.சேன நாயக்க, திருக்கோணமலை அரச அதிபராக எம்.பீ.சேனநாயக்க ஆகியோர்களை சிறிமாவோ நியமித்தார். நெவில் ஜெயவீர முன்பு கல் லோயாத் திட்டத்தின் மேலதிகாரியாகப் பணி யாற்றியவர். 14,000 தொழிலாளர்களை இவர் கல்லோயாவில் கட்டி மேய்த்த காரணத்தால் யாழ்ப்பாணத்தில் சமஷ்டிக் கட்சியினரின் சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் அவர் திறம்படக் கையாள்வார் என்ற நம்பிக்கை டய சுக்கும் சிறிமாவோவுக்கும் இருந்தது. தனக்கு இடப்பட்ட பணி பற்றி ஜெயவீர பெரும் கடியன் என்று பெயர் பெற்ற ஜேர்மன் றொட்வைலர் நாய்போல் சத்தியாக்கிரகிகள் மீது பாய்வேன் என்ற எதிர்பார்ப்பு இருவரிடமும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். (ஜலன்ற் ஞாயிறு இதழ் 2008.10.05)

சிறிமாவோவின் பாதுகாப்புச் செயலர் என்.கியூ.டயசைத் தீர்க்கதரிசி எனப்படுவதற்குச் சில காத்திரமான காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுடைய எதிர்ப்பு சத்தியாக் கிரகத்தோடு நிற்கமாட்டாது. அது சரியாக இரு பத்தைந்து வருடங்களில் இளைய தலை முறையினர் தலைமையில் ஆயுதப் போராட்ட மாக மாறும் என்று டயஸ் உறுதியாக நம்பினார். அப்படியானதொரு ஆயுதப்போராட்டம் தமிழர் களால் தொடங்கப்படும்போது அதை எதிர் கொள்வதற்குச் சிங்களவர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று டயஸ் உறுதி பூண்டார். தனிச் சிங்களச் சட்டத்தை வடகிழக்கில் அமுலாக்குவதோடு எதிர்காலத்தில் வரப்போகும் ஆயுதப் போராட்டத்தையும் எதிர்கொள்ள டயஸ் தயாரானார்.

வடமாகாணத்தைச் சுற்றி அவர் சிங்களத் துருப்புக்கள் அடங்கிய இராணுவ முகாம்களை அமைக்கும்படி லெப்.கேணல் சேபால அட்டிய கலவுக்கு உத்தரவு பிறப்பித்தார். மன்னார் தொடக்கம் திருக்கோணமலை வரை இந்த முகாம்கள் அமைக்கப்பட்டன. மன்னார் மாவட் டத்தில் அரிப்பு, மறிச்சிக்கட்டி, பளை, தாழ்வுபாடு ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப் பட்டன. யாழ்.மாவட்டத்தில் பூநகரி, காரைநகர், பலாலி, பருத்தித்துறை, ஆனையிறவு ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டன. கிழக்கில் திருக்கோணமலை யிலும் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் முகாம்கள் அமைக்கப்பட்டன. காரைநகர் கடற்படைமுகாமை விரிவு படுத்தும்படியும் அதற்காகத் தமிழ் மக்களின் நிலங்களைச் சுவீகரிக்கும் படியும் அவர் உத்தரவிட்டார். வெறும் அலங்காரத் திற்காகச் சிறிலங்கா வைத்திருந்த வெள்ளை யானை போன்ற கடற்கலங்களைக் கைவிடும் படியும் வினைத்திறனுள்ள கடற் கலங்களைக் கொள்வனவு செய்யும்படியும் அவர் பரிந்துரை செய்தார். பனிப் போர்க்காலத்தில் சோவியத் ஒன்றியத்தை முடக்குவதற்காக அமெரிக்கா கையாண்ட விரிவைத் தடுக்கும் கொன்ரேயின்மென்ற் (Containment) கொள்கைக்கு நிகரான தென்று டயசின் செயற்பாடுகள் பாராட்டப்படுகின்றன.

வடகிழக்கில் சங்கிலித்தொடர் போல் நிரந்தர சிங்கள இராணுவ முகாம்களை அமைப்பதற்குத் தமிழர்களிடமிருந்து எழும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக ஒரு சமயோசிதமான உத் தியை அவர் செயற்படுத்தினார். இதனால் உண்மை நோக்கம் அறியாத அப்பாவித் தமிழர்கள் ஏமாற்றப்பட்டனர். தமிழ் நாட்டில் இருந்து இலங்கை வரும் கள்ளத்தோணித் தமிழர்களின் வருகையைத் தடுப்பதற்காக என்று கூறி அவர் ராபாய் (Taffi) எனப்படும் நடவடிக்கையை ஆரம்பித்தார். தமிழ் நாட்டில் இருந்து வரும் திருட்டுக் குடியேற்றக்காரர்களைத் தடுப்பதற்காகத் தான் இந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன என்று டயஸ் விளக்கம் அளித்தார். இதற்குச் சில தமிழ்த் தலைவர்கள் தமது முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். வல்வெட்டித்துறை, ஊர்காவற்றுறை போன்ற கரையோரங்களில் இருந்து தமிழ்; நாட்டிக்குப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகவும் இந்த இராணுவ முகாம்களை அமைக்க உத்தரவிட்டுள்ளேன் என்று டயஸ் கூறியபோது அதையும் தமிழ் தலைவர்கள் உள்வாங்கிக் கொண்டனர். இராணுவ முகாம்கள் அமைத்தல் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைப் பதற்காக யாழ். அதிபரின் பழைய பூங்கா விடுதியில் தன்னையும், அரச அதிபரையும், சேபால அட்டிய கலவையும் தொடுக்கும் எஸ்.எஸ்.பி. ரக இருவழித் தொடர்பு வானொலி இணைப்பையும் டயஸ் நிறுவினார்.

அன்று டயஸ் எதிர்பார்த்த இன்னுமொரு தீர்க்கதரிசனம் பற்றியும் அவருக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன. அவர் அன்று கூறியது 1980 களில் அச்சொட்டாக நிறைவேறியது உண்மை யில் ஒரு வியப்பூட்டும் அம்சம்தான். தமிழ் இளைஞர்கள் என்றோ ஒரு நாள் போருக்குத் தயாராவார்கள். இதை இந்தியா தனது தேசிய நலனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும். தமிழ் இளைஞர்களுக்கு உதவ இந்தியா முன்வரும். தமிழ் நாடு முக்கிய இடம் பிடிக்கும். தமிழர்களின் ஆயுதப் போராட்டத் திற்குத் தமிழ் நாடு களமாக அமையும். அங்கிருந்து ஆயுதங் களும் பிற உதவிகளும் தமிழர் பகுதிக்கு வந்து சேரும் இத் தனையையும் டயஸ் 1960களில் எதிர்வு கூறினார். அந்தளவோடு அவர் நிற்கவில்லை. பாக்குத் தொடுவாய் ஊடாக எதிர்காலத்தில் நடக்கப்போகும் போக்குவரவைத் தடுப்பதற்குப் பொருத்தமான கடற்படையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் திட்டமிட்டார்.

என்.கியூ.டயஸ் என்ற மனிதரை ஆய்வு செய்வோர் அவரை அரச நிர்வாகி, இராணுவத் திட்டமிடல் நிபுணர், விட்டுக்கொடுப் பிற்கு இடம் வையாத சிங்களத் தேசியவாதி என்ற மூன்று வடிவங்களில் பார்க்கிறார்கள். இலங்கையின் இனப்பிரச் சினையை உருவாக்கியதோடு அதைத் தீர்க்க முடியாத தூரத்திற்குக் கொண்டு சென்றவர்கள் என்று கணவன் பண்டார நாயக்க, மனைவி சிறிமாவோ, மகள் சந்திரிகா பற்றிக் குறிப்பிடு வார்கள். டயஸ் இந்தப் பட்டியலில் இடம்பெறும் தகுதி உடைய வர். அவரைத் தீர்க்கதரிசி என்று பாராட்டுவோர் ஒரு பேருண் மையை மறந்து விட்டார்கள். இவரைப் போன்றவர்களின் தூர நோக்கற்ற நடவடிக்கைகளால் இலங்கையில் இரு நாடு பிறக் கும் என்ற தரிசனம் இவர்களுக்கு எட்டாமல் போய்விட்டது. உண்மையான தீர்க்கதரிசி தமிழீழத்தின் பிறப்பை என்றோ உணர்ந்திருப்பான். அதை எதிர்பார்த்துக் காத்திருப்பான் ஊழிற் பெருவலி யாதுள?

- அன்பரசு-

No comments:

Post a Comment