Tuesday, November 17, 2009

சச்சின் - பால்தக்ரே - இந்தியா

தமிழ் நாட்டைத்தாண்டினால் வடக்கில் எங்கு போனாலும் யாருக்கும் தமிழ் நாடு என்ற ஒன்று உள்ளது என்ற உணர்வு வராது. அவ்வளவுதான் தமிழ் நாட்டின் மகிமை. இங்கிருந்தது கொண்டு மும்பை நிலவரத்தை அலசக்கூடாது என்று நினைக்கிறேன்.
சச்சினின் கருத்தும் விசுவின் முதலில் நான் இந்தியன் பிறகு தான் தமிழன் என்ற கருத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாக நான் கருதவில்லை. ஏகாதிபத்தியத்திற்கும் நாட்டுபற்றுக்கும் உள்ளானவர்களுக்கு (இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்) தான் இனத்தைவிட நாடு பெரிதாக தெரியும். தான் இந்தியன் அதற்கு பிறகுதான் இந்து என்று விசுவோ சச்சினோ கூறமாட்டார்கள் என்பது என் கருத்து. இதே கருத்தை வெறு யாராவது கூறியிருந்தால் அதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும். ஒரு முஸ்லிம் நான் இந்தியன் பிறகு தான் இந்தியன் என்று கூறுவதும் ஒரு இந்து தான் இந்து பிறகு தான் முஸ்லிம் என்று கூறுவதாலும் எற்படும் விளைவுகள் முற்றிலும் வித்தியாசமானவை.

சச்சின் கூறியதை நான் பிழை என்று சொல்லவரவில்லை. ஆனால் பால்தக்ரே சொல்வது ஒன்றும் பிழையல்ல. இந்தியா தமிழர்களுக்கு செய்துவரும் அநியாயம் போல மற்ற இனங்களுக்கு செய்யவில்லையா? நேபாளத்தில் அரசியல் புரட்சி, அசாம் சிக்கல், இருந்து அந்தமான் சுனாமியில் சிக்கிய மக்களுக்கு என்ன நடந்தது? இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏதோ அநியாயம் நடக்கி்ன்றது.
புத்திசாலித்தனமாக பிரிந்து போன பாக்கிஸ்தான் தான் இந்திய மக்களுக்கு ஒரே கவலை. மற்றும் படி பாக்கிஸ்தான் இந்திய கிரிகெட் முழுமையாக இன, மத வெறிகொண்ட ஒரு சண்டையே. அங்கு மனிதநேயத்தையோ மயிரையோ எதிர்பார்கவேண்டாம். இந்திய வல்லாதிக்க வெறியும் பாக்கிஸ்தானின் மதவெறியும் தான் அங்கே உள்ளது. மற்றும் படி சிறிலங்காவிற்கு முரளி போல வெளியுலகிற்கு காட்டத்தான் அசாரும் அப்துல் கலாமும். இந்தியாவின் வல்லாதிக்க கனவில் மராட்டியர்களும் பாதிப்படைந்திருக்கலாம். யதார்த்தை உணருங்கள். அப்படித்தான் என்று சொல்லவரவில்லை.
தமிழ்நாட்டில் எத்தனை மலையாளிகள், வடஇந்தியர்கள் கொடிகட்டிப்பறக்கிறார்கள். ஆனால் கேரளாவில் தமிழன் கடலை விற்கிறான். ஒரு கேவலமான தமிழன் கருணாநிதியை வைத்து 8கோடி தமிழர்களை முட்டாள் ஆக்வில்லையா வடஇந்தியர் கையில் இருக்கும் இந்திய அரசு? அதுபோல ஏதுவும் செய்திருக்கலாம். பால்தக்ரே இந்து வெறியராக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர் வடஇந்தியர்களை கூட்டு சேர்கவில்லை. ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். அதே வேளை தம் மக்களின் உழைப்பிற்காக தமிழர்களின் இருப்பை வெறுத்தார். அவர் ஒன்றும் கருணாநிதிபோல விலைபோகவில்லை.

No comments:

Post a Comment