நான் விரும்பி வாசிக்கும் ஒரு வலைப்பு தீராத பக்கம். அதில் வந்த ஒரு பதிவை வாசிக்கும் போது அவர் சொல்வது சரி என்று பட்டது. ஆனால் பதிலளித்தவர்கள் சொன்னவிடங்களை வைத்து நான் எழுதிய பதிலே இந்த பதிவு. இந்திய ஊடகங்களில் உள்ள மிகக் கொடுமையான விடயம் திரித்துக் கூறுதல். அதை இவரும் செய்கிறாரா என்று சந்தேகப்படுகிறேன்.
இந்தியன் என்பதையிட்டு பெருமைபடவில்லை என்பது எங்கள் பாரத மாதாவின் செல்வங்கள் வாசிக்கும் போது உணர்ச்சி வசப்படக்கூடும். ஆனால் இந்தியன் என்று பெருமைப்படுவதைவிட மனிதன் என்று பெருமைபடுகிறேன் என்பது எவ்வளவு முதிர்ச்சியை காட்டுகிறது. ஏன் இப்படி ஒருவர் கூறிய கருத்தை முழுவதுமாக திரித்துக் கூறுகிறீர்கள்.? ஊடகத்தில் இது நியாயமா?
இன்றும் விஞ்ஞானியின் முழுமையான பேட்டி படிக்கவில்லை. பிழை இருந்தால் பொறுத்தருளவும்.
விருது பெற்றவர் இந்தியர் என்று பெருமைபடுவதைவிட இந்த மனிதர் ஒரு தமிழர் என இந்தியன் என பெருமைப்படலாம்.
இந்தியன் என்பதை விட மனிதன் என்பது தான் முக்கியம். ///இந்தியன் என்பதைவிட மனிதன் என்று தன் கருத்தைக் கூறியிருக்கிறார். அவரின் பேட்டியில் அவர் என்ன அர்த்தத்தில் அதை சொல்லியிருக்கிறார் என்பதை விடுத்து அதில் உள்ள பிழையான அர்த்தம் தரும் விடயங்களை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். சில இந்திய ஊடகங்கள் செய்வது போல. (உதாரணம். இந்தியன் என்று பெருமைபடவில்லை என்று மட்டும் சொல்வதுக்கும் இந்தியனை விட மனிதன் என்று சொல்வதை பெருமைபடுவதாக சொல்வதற்கும் நிறைய வித்தியாசம். ஏனையா இந்த பாரபட்சம்? இமெயில் விடயம்: எம்மவர்கள் இதில் சளைத்வர்கள் அல்ல. இலகுவாக ஸ்பாம் மூலம் வடிகட்டலாம். ஆனால் மக்களை திருந்தத் தான் சொல்கிறார். இவ்வளவு காலமும் இவர் எங்கு இருக்கிறார் என்று கூட அறியாத நீங்கள் இப்போது தலையில் வைத்து கொண்டாடினால் ஒருவருக்கு வரும் ஆதங்கமே இது.
///"எனக்கு இந்தியாவில் பணியாற்ற வாய்ப்பு ....... மறுத்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்." ///இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலைசெய்வது பிழை என்றால் இதுவும் பிழைதானே. கோடி கோடியாக இவரின் படிப்பிற்கு செலவளித்த நாட்டில் பணீபுரிய அவர் விரும்புவது அவரின் நல்ல மனதே. இந்தியன் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அவர் இருக்க விரும்பவில்லை. (தமிழன் என்று கூட) அவர் படிப்பின் பயன்கள் இந்தியாற்கு மட்டும் என்று இருக்க நினைப்பது சுயநலன் இல்லையா? வெளிநாடுகளில் படித்து புகழ் பெற்றால் மட்டுமே நாம் கண்டுகொள்வொம். மற்றும் படி?
ஒருவர் தொடர்ந்து பணியாற்றிய இடத்தைவிட்டு மாறமாட்டேன் என்பது பிழையா? மனதை தொட்டு சொல்லுங்கள். இவர் இந்தியாவில் இருந்தால் இதை சாதித்திருப்பாரா?என்னைப் பொறுத்தவரை அவர் தான் இந்தியன் தமிழன் என்பதை விட மனிதன் என்பதையே முதன்மை படுத்தியிருக்கிறார். இப்போது அவர் தமிழன் என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
Thursday, October 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment