Wednesday, January 27, 2010

ஈழ ஆதரவு தளத்தின் வன்னிபற்றிய பதிவு சொல்வது என்ன?

அண்மையில் ஒரு தளம் வன்னிப் பயணத்தை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதன் உள்ளடக்கம் பற்றி ஒரு வரின் கருந்து... அவரது பின்ணுட்டத்தில் இருந்து...

அந்த பதிவு வன்னியின் வலிகளை சொல்லிவிட்டு கடைசியில் எமது போராட்டத்தை பற்றி எம் மக்கள் வன்னியில் இருந்துதர்ன பேசவேண்டும். வெளிநாடுகளில் இருந்து பேசப்படடாது என்று ஒரு கருத்தை நசுக்காக அல்லது நஞ்சுத்தனமாக விதைத்திருக்கின்றனர்..

உணர்ச்சி வசப்பட்டது போதும். நண்பர்களே..எதையும் உற்று வாசியுங்கள். வெளிநாட்டு மக்கள் தான் இந்த போராட்டத்தின் ஆதாரமாக காசும் வழங்கினார்கள். அதே வேளை கொட்டும் பனியில் உறவுகளுக்காக தெருவில் பிள்ளை குட்டிகளுடன் இறங்கி போராடினார்கள். எமது போராட்டம் தாயக மக்களையும் புலம் பெயர்ந்த மக்களையும் இரு கண்கள் போல கொண்டது. ஆனால் இந்தியாவும் சிறிலங்காவும் இவர்களை தான் முதல் எதிரிகளாக கருதியது. அவர்களினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிவைக்ப்படார்க்ள. அதன் வழியிலே நாமும் எடுத்தத்றகல்லாம் வெளிநாட்டு மக்களளை குறைகூறுவதை வழமையாக்கிவிட்டோம். எனியும் வேண்டாம் இந்த குற்றச்சாட்டு. இவர்கள் இவ்வளவும் சொல்லிவட்டு கடைசியில் கொடிய நஞ்சை விதைத்துவிட்டு செல்கிறார். வெளிநாட்டு தமிழர்க்ள கதைக்ககூடாதாம். அது சரி இந்த நிலைமையில் எந்த வெளிநாட்டு தமிழர் வன்னியில் இவ்வளவு துணிவாக மீண்டும் வெல்லுவம் எ்னறு சொல்லுவார்?

அந்த நிலைமையில் தான் வன்னி நிலம் இருக்கிறதா? இவ்வவும் எழுதிவிட்டு பி்ன அதற்கு படங்களாம்..நாமும் இதை வாசித்துவிட்டு உணச்சி வசப்பட்டு இருப்பூம். ஆனால் எம் மனதில் ஆழமாக வெளிநாட்டு தமிழர்களில் வெளிநர்டுகளில் இருந்து பேசப்படாது என்று ஒரு கருந்து எம்மை அறியாமலே புகுந்துவிடும். தமிழ் உறவுகளே.. இப்படிபட்ட நரித்தனமாக குள்ளநரிகளின்ம எமாறவேண்டாம்.. எதையும் சிந்தித்து அறியுங்கள்..

No comments:

Post a Comment